என் காதலியின் இறப்பை மறக்க முடியவில்லை: மனம் கலங்கிய பிரபல நடிகரின் பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
146Shares
146Shares
lankasrimarket.com

பிரபல பாலிவுட் நடிகர் அமித் டாண்டனின் காதலி அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் உயிரிழந்த நிலையில் காதலியை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

நியூயோர்க்கில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கடந்த 2001-ல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் நடிகர் அமித்தின் காதலியான மோனிகாவும் ஒருவராவார்.

இச்சம்பவத்தின் 17-வது ஆண்டு தினம் இரு தினங்களுக்கு முன்னர் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் மோனிகாவின் இறப்பை மறக்க முடியாமல் அமித் இன்னும் தவித்து வருகிறார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் அமித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், 17 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை என்றென்றைக்கும் மாறிவிட்டது. மிஸ் யூ மோனிகா என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்