படப்பிடிப்பில் திடீர் நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்த நடிகர்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு
269Shares
269Shares
lankasrimarket.com

கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே பிரபல நடிகர் குஞ்சு முகமது மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் அருகே மதிலகம் என்ற ஊரை சேர்ந்தவர் குஞ்சு முகமது(வயது 58).

சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்தவர், சென்னை வந்து பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார்.

தொடர்ந்து கேரளா சென்றவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது, இந்நிலையில் சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் நடித்து வந்தார்.

நேற்று முன்தினம் படப்பிடிப்பில் பங்கேற்றவருக்கு திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்