பிக்பாஸ் வீட்டில் பாலாஜி அழுவதைக் கண்டு மனைவி நித்யா சொன்ன வார்த்தை! ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மகள் எழுதிய கடிதத்தைக் கண்டு பாலாஜி அழுத நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்ணீரைப் பார்க்கிறேன் என்று நித்யா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகா இருவரும் சேர்ந்து கடிதம் ஒன்றை பாலாஜிக்கு எழுதி அனுப்பியிருந்தனர்.

அந்த கடிதத்தைக் கண்ட பாலாஜி கண்ணீர் வடித்தார்.

இதையடுத்து நித்யா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், 9 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் பாலாஜியின் கண்ணில் கண்ணீரைப் பார்க்கிறேன்,அவரை ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் கணவராக ஏற்றுகொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நித்யாவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்