அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும்: நடிகை மீனா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் அஜித் அவர்களின் காலை தொட்டு வணங்க வேண்டும் என தெலுங்கு நடிகை மீனா உணர்ச்சிகரமாக ஒரு பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஸ்வாசம் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தை இவர் சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஒரு ரசிகையின் தருணம். இனிமையான எளிமையான மனிதர். என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு மனிதரை பார்த்ததில்லை.

ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் நடிகர்களின் நடத்தையில் மாற்றம் இருப்பதை பல நடிகர்களிடம் பார்த்திருக்கிறேன். ஈகோ என்கிற நாய் பின்னால் வந்தால் வெற்றி நிலைக்காது. அவர்களெல்லாம் அஜித்தின் காலைக் கழுவி வணங்கினால் அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவீதமாவது வரும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்