மனைவி நித்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்த தாடி பாலாஜி: நித்யா கொடுத்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தாடி பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவும், மகன் போஷிகாவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் எழுபது நாட்களுக்கும் மேலாக தங்கி இருக்கும் போட்டியாளர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து கடிதம் வருகிறது.

இந்நிலையில் இன்று ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் புரோமோவில் தாடி பாலாஜிக்கு கடிதம் வந்த காட்சிகள் வருகின்றன.

இந்தக் கடிதத்தை அவர் மகள் போஷிகாவும், மனைவி நித்யாவும் எழுதியது தெரிகிறது.

கடிதத்தில் பாலாஜிக்கு நித்யா அறிவுரை மழை பொழிந்துள்ளார்.

கடிதத்தின் இறுதியில் இப்படிக்கு பகுதியில் ‘ப்ரெண்ட் அண்ட் ப்ரெண்ட் ஒன்லி' எனக் குறிப்பிட்டுள்ளார் நித்யா.

இதைப் படித்த பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், எப்படியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், தன் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் இருக்கிறார் பாலாஜி.

ஆனால் நித்யா தான் பாலாஜிக்கு வெறும் தோழி மட்டுமே என்பதை இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்