பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம்: இதயம் நொறுங்கி விட்டதாக முன்னாள் காதலி புலம்பல்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், ஜோனஸின் முன்னாள் காதலி தனது இதயம் உடைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸுக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தத்தின் போது, ஜோனாஸின் பெற்றோர் ஒன்றரை கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்தனர்.

இந்நிலையில், இந்த நிச்சயதார்த்தம் ஜோனஸின் முன்னாள் காதலி மற்று அவுஸ்திரேலிய பாடகியுமான டெல்டா கூட்ரெம்முக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக டெல்டாவும், ஜோனஸும் பிரிந்தனர்.

அதன் பின்னர் தான் பிரியங்கா சோப்ராவை ஜோனஸ் காதலித்துள்ளார். தற்போது இதுகுறித்து டெல்டா கூட்ரெம் கூறுகையில்,

‘எனக்கும் நிக் ஜோனஸுக்கும் சில பிரச்சனைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு வரும்போது சமரசம் செய்து விடலாம் என்று காத்திருந்தேன்.

அதற்குள்ளாக பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார். நிக் ஜோனஸை தவற விட்டு விட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்ததை அறிந்து எனது இதயம் உடைந்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்