பிக்பாஸ் மஹத்தின் கன்னத்தில் அடித்த சிம்பு: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மஹத் கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சிம்பு தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள் என கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக சண்டை போட்டு, பெண்களை தவறாக திட்டிய காரணத்திற்காக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது நண்பர் சிம்புவை சந்தித்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து பார்த்த காரணத்தால், மஹத்தின் கன்னத்தில் செல்லமாக அடித்து வரவேற்றுள்ளார் சிம்பு.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்