பிரபல நடிகரின் வீட்டிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்! வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் உள்ள பிரபல இந்தி நடிகருக்கு சொந்தமான விடுதி உட்பட 11 விடுதிகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழி தடத்தில் உள்ள விடுதிகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது 39 விடுதிகளில் 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும் மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரி பார்த்து அனுமதி இல்லையெனில் 'சீல்' வைக்கவும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் பத்து விடுதிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

பொக்காபுரத்தில் உள்ள இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்களுக்கு முறையான அனுமதி இல்லை என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 12 விடுதிகளுக்கு உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை காலி செய்ய அதன் உரிமையாளர்களுக்கு 24 மணி நேர 'கெடு' விதித்தது.

இந்நிலைலயில் நேற்று உயர் அதிகாரிகள் தலைமையிலான மூன்று குழுவினர் மீதமுள்ள 11 விடுதிகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நடிகர் மிதுன் சக்கர வர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்கள் உட்பட 11 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் சீல் வைப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers