மகத் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்: பகீர் கிளப்பிய பிக்பாஸ் வைஷ்ணவி!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேறியிருக்கும் நிலையில், அவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வைஷ்ணவி பகீர் கிளப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் அதற்கு எதிர்ப்பு கிளப்பினாலும், மறுபக்கம் அதற்கு அடியாமையாகியுள்ள ரசிகர்களும் உள்ளனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் 8 வது நபராக மகத் வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருப்பவர்களுடன் அவர் நடந்த கொண்ட விதம் மற்றும் யாஷிகாவுடனான காதலால் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தே அவர் வெளியேறியிருந்தார்.

இந்த நிலையில் மகத் பற்றி கேள்வி எழுப்பிய சில ரசிகர்களுக்கு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.

அதில், ”மஹத் என்னிடமும் கடுமையாக நட்ந்து கொண்டார். பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டார். இதை நான் வெளியில் வந்த பிறகே உணர்ந்தேன். 32 வயதாகியும் அவர் இன்னும் பக்குவமடையவில்லை என்பதையே அவரது செயல் உணர்த்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

வைஷ்ணவியின் இந்த திடீர் பதிலால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மகத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக டேனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...