உங்களது வார்த்தைகள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது: நடிகர் விஜய் சேதுபதி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தனது திரைப்படத்திற்கு மக்கள் அளித்த நல்ல விமர்சனங்கள், தனக்கு செருப்படி மாதிரி இருந்ததாக நடிகர் விஜய் சேதுபதி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில்,

‘இங்கே நல்ல படங்களை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்த படத்துக்கும் அந்த சிரமங்களை அனுபவித்தோம். என் படங்களை விமர்சிக்கும்போது எனக்கு கோபம் வந்து இருக்கிறது.

இப்போது தான் எனக்கு விமர்சனம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. நீங்கள் ரசித்து கொண்டாடுகிறீர்கள், பெரிய பெரிய வார்த்தைகளால் மனதை குளிர்விக்கிறீர்கள்.

அது எனக்கு ஒரு பெரிய செருப்படி மாதிரி இருந்தது. எனக்கு பாடம் புகட்டிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்