ரெட்கார்டு கொடுத்து பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மஹத்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பல விமர்சனங்களை சந்தித்து வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய எபிசோட்டில் மஹத் அதிகம் விசாரிக்கப்பட்டதால் இன்று அவர் தான் வெளியேற்றப்படுவார் என பலரும் கருதினர்.

எனினும் மக்கள் நினைப்புக்கு எதிராக வெளியேற்று படலம் நடப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் ரெட் கார்டு கொடுத்து மஹத் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாராம்.

ஏற்கனவே யாஷிகாவுடன் காதலால் பிராச்சி பிரிந்து சென்றுள்ள நிலையில், வெளியே வந்து என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்