உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியானது! யார் முதலிடம் தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

உலகிலே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இது கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் 1 வரையிலான கால அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்லோனி முதலிடத்திலும், டுவைன் ஜான்சன் 2-வது இடத்திலும்,மூன்றாவது இடத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், 4-வது இடத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், 5-வது இடத்தில் ஜாக்கிசான், வில் ஸ்மித் 6-வது இடத்திலும், ஆடம் சாண்ட்லர் 8-வது இடத்திலும், கிறிஸ் ஈவான்ஸ் 10-வது இடத்திலும் உள்ளனர்.

இதில் இந்திய நடிகர்களான அக்‌ஷய் குமாரும், சல்மான் கானும் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு 40.5 மில்லியன் டொலர் சம்பளம் பெற்று அக்‌ஷய் குமார் ஏழாவது இடத்திலும், 38.5 மில்லியன் டொலர் பெற்று சல்மான் கான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா நாட்டின் மதுபான தொழில் அதிபர் டியாஜியோ என்பவர் 100 கோடி அமெரிக்க டொலர் கொடுத்து க்லோனிடமிருந்து காசாமிகாஸ் என்ற நிறுவனத்தினை வாங்கியுள்ளார்.

இந்த வருடம் ஜார்ஜ் க்லோனியின் படம் எதுவும் வெளியாகாத நிலையிலும், நிறுவன விற்பனையால் கிடைத்த வருவாயால் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...