இந்த நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி திரைப்பட நடிகைகளில் சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த கதாநாயகிகள் குறித்து இங்கு காண்போம்.

ஹிந்தி நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்தும், சம்பள விவரம் குறித்தும் பாலிவுட் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.15 கோடியை சம்பளமாகவும், விளம்பர படங்களுக்கு ரூ.8 கோடியையும் சம்பளமாகவும் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 45 மில்லியன் டொலர்கள் ஆகும்.

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரியல்களில் நடித்து வருகிறார். எனினும் படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. விளம்பர படங்களுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்குகிறார். பிரியங்காவின் சொத்து மதிப்பு 40 மில்லியன் டொலர்கள் ஆகும்.

ஐஸ்வர்யா ராய்

தற்போது கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஒரு படத்துக்கு ரூ.10 கோடியை சம்பளமாக பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 35 மில்லியன் டொலர்கள் ஆகும்.

மாதுரி தீக்‌ஷித்

ஒரு காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக வலம் வந்த மாதுரி தீக்‌ஷித், தற்போது ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 35 மில்லியன் டொலர்கள் ஆகும்.

பிரீத்தி ஜிந்தா

தற்போது பல நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர்கள் ஆகும்.

வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் ஒரு படத்துக்கு ரூ.6 கோடியில் இருந்து ரூ.7 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 27 மில்லியன் டொலர்கள் ஆகும்.

அனுஷ்கா ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஒரு படத்துக்கு ரூ.7 கோடியில் இருந்து ரூ.9 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 25 மில்லியன் டொலர்கள் ஆகும்.

சோனம் கபூர்

நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூரின் சொத்து மதிப்பு 15 மில்லியன் டொலர்கள் ஆகும்.

சோனாக்‌ஷி சின்ஹா

மூத்த நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா ஒரு படத்துக்கு ரூ.4 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 15 மில்லியன் டொலர்கள் ஆகும்.

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் ஒரு படத்துக்கு ரூ.11 கோடி சம்பளமாக பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 10.5 மில்லியன் டொலர்கள் ஆகும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்