69 வயதில் தந்தையாக போகும் நடிகர்! நடிகை ஷில்பா ஷெட்டியை பொது இடத்தில் முத்தமிட்டவர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே 69வது வயதில் தந்தையாக போகிறார்.

அமெரிக்காவின் மூத்த திரைப்பட நடிகர் ரிச்சர்டு கெரே(69). இவர் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடிகராக அறிமுகமாகி நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டித் தழுவி முத்தமிட்டார். இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ரிச்சர்டு மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ரிச்சர்டு கெரே தனது இரண்டாவது மனைவியின் மூலம் தந்தையாக உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அலஜாண்ட்ரா(35) என்ற பெண்ணை இரண்டாவதாக ரிச்சர்டு திருமணம் செய்தார். இவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

அலஜாண்ட்ராவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் அவர் கருவுற்றுள்ளார். இதன்மூலம், ரிச்சர்டு கெரே 69வது வயதில் தந்தையாக உள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...