யாரும் தற்கொலை செய்யாதீங்க: என் அனுபவத்துல சொல்றேன்... பிரபல தமிழ் நடிகை கண்ணீர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

என் அனுபவத்தில் சொல்றேன், யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்யாதீர்கள் என பிரபல நடிகை சூஸன் ஜார்ஜ் கூறியுள்ளார்.

மைனா, நண்பேண்டா போன்ற திரைப்படங்களிலும் பல்வேறு தமிழ் சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சூசன் ஜார்ஜ்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் ஒருத்தரை காதலிச்சுட்டிருந்தேன். அவர் மேல் ரொம்பவே அன்பு வைத்திருந்தேன். கல்யாணம் நெருங்கும் வேளையில், அவரது குணம் நெகட்டிவா மாறியது.

பின்னர் அவர் எனக்குச் சரியான வாழ்க்கைத் துணை இல்லைனு பிரிஞ்சுட்டேன், கல்யாணமும் நின்று போனது.

ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றேன். மூணு நாள் கோமாவில் வென்டிலெட்டரில் இருந்து மீண்டுவந்தேன்.

என் அம்மா இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருப்பேன் என எனக்கே தெரியாது.

இனி எந்தப் பிரச்னை வந்தாலும், எதிர்த்துப் போறாடணும்னு உறுதியா இருக்கேன். என் அனுபவத்தில் சொல்றேன், யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்யாதீர்கள், பிடித்தவர்களிடம் மனம்விட்டுப் பேசினாலே பாதி பாரம் குறைந்துவிடும் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்