என் அம்மா சொன்னது இன்று நடந்துவிட்டது! ஜெயலலிதா இருந்தால் காப்பாற்றியிருப்பார்: நடிகை ஸ்ரீரெட்டி வேதனை

Report Print Santhan in பொழுதுபோக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னை காப்பாற்றியிருப்பார் என்று பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி வருகிறார்.

அதிலும் அவர் கூறும் சில நடிகர்கள் இவர்களுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.

இவை அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக அனைத்து ஊடகங்களிலும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் குடும்பத்தை விட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து வந்துவிட்டதாகவும், என்னுடைய அப்பா சிறியதாக ஸ்வீட் தொழில் செய்து வந்ததார்.

என் அம்மா வீட்டில் தான் இருப்பார், நான் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்தேன்.

அதன் பின் பல காரணங்களுக்காக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என் வீட்டில் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை, என் அம்மா சினிமா வேண்டாம், அது ஒரு சாக்கடை, பாலியல் ரீதியான பிரச்சனைகள் எல்லாம் இருக்கும் என்று கூறினார்.

ஆனால் அதை எல்லாம் தாண்டி நடிக்க ஆரம்பித்தேன். தற்போது அவர் சொன்னது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது என்று வேதனையாக கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீரெட்டி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீதி கிடைத்திருக்கும். அவரது ஒரே பார்வை என்னை காப்பாற்றியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers