பிரபல நடிகரை விவாகரத்து செய்த நடிகைக்கு இரண்டாவது திருமணம்: அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகை ரேணு தேசாய் இரண்டாம் திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரேணு சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் ரேணு தற்போது ஒருவரை காதலிக்கும் நிலையில் அவரையே இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

ஆனால் ரேணுவை இரண்டாவது திருமணம் செய்ய விடமாட்டோம் என பவன் கல்யாண் ரசிகர்கள் மிரட்டி வருவதால் 2-வது கணவர் குறித்து ரேணு ரகசியம் காத்து வருகிறார்.

ரசிகர்களின் மிரட்டலை தொடர்ந்து தனது திருமணத்தை ரேணு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடத்தவுள்ளார்.

அவர் கூறுகையில், டிசம்பர் மாதம் என் திருமணம் நடைபெறும்.

அப்போது அன்னதானம் செய்யவுள்ளோம். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் புதிய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers