ஸ்ரீதேவியின் பெயரை காப்பாற்றிவிட்டார்: ஜான்வியின் நடிப்பிற்கு குவியும் பாராட்டுக்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ’தடக்’ படத்தில், அவரது நடிப்பு சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது மராத்தியில் பெரும் வெற்றி பெற்ற ’சாய்ரத்’ படத்தின் Remake ஆகும்.

இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியின் பெயரை அவரது மகள் காப்பாற்றுவாரா என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஜான்வியின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ஜான்வியின் வெகுளித்தனமான, துறு துறு நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிப்பு, நடனம், பாடல், காதல் காட்சிகள் என அனைத்தையும் ஜான்வி சிறப்பாக செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும், முக்கிய காட்சிகளில் Locations எதுவும் பொருத்தமாக இல்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்