என் திருமண வாழ்க்கையில் முட்டாள்தனம் பண்ணிட்டேன்: கலங்கிய பிரபல தமிழ் நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
112Shares
112Shares
ibctamil.com

என் கல்யாண வாழ்க்கையில் முட்டாள்தனம் செய்துவிட்டேன் என பிரபல நடிகை ஷர்மிலி கூறியுள்ளார்.

நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், பல திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளவர் ஷர்மிலி.

சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், கவுண்டமணிக்கு ஜோடியா 27 படங்களில் நடிச்சிருக்கேன்.

நடிப்பைத் தாண்டி சினிமா பிரபலங்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த நட்பும் எனக்குக் கிடையாது. அதனால் சினிமா வாய்ப்புக்காக எனக்கு யாரும் உதவவில்லை என் பெரிய மைனஸ், உடல் எடைதான். சரியான உணவு, உடற்பயிற்சியைக் கடைப்பிடித்தும் உடல் எடை குறையவில்லை.

என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் என்னை புரட்டி போட்டது.

அதிக எதிர்பார்ப்புடன் என் கல்யாணம் நடந்தது. வெளிநாட்டில் சில ஆண்டுகள் வசித்தேன். அப்புறம், என் கல்யாண வாழ்க்கை நெகட்டிவாக ஆகிவிட்டது.

நான் முட்டாள்தனம் பண்ணி விட்டதாக நினைக்கிறேன்.

அந்தக் கவலையாலும், உடல் எடை பிரச்னையாலும் துவண்டு போனப்போது என் குடும்பத்தினர் தான் பக்கபலமா இருந்தார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்