ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் கார்த்தி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஸ்ரீரெட்டி ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டி வருவதாகவும், அவர் மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். தமிழ் திரையுலகினர் மீதும் அவர் தற்போது குற்றம் சாட்டி வருவது, தமிழ் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில்,

’ஸ்ரீரெட்டி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறார். அவரிடம் ஆதாரம் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பார். ஆதாரமில்லாமல் கூறும் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது அவர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்