சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி மீது வழக்கு... இயக்குனர் சுந்தர்.சி அதிரடி முடிவு

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தவறான தகவலை வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகையே புரட்டி போட்ட சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி, தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒவ்வொரு நடிகர்கள் பற்றியும் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதனால் தெலுங்கு திரையுலகமே அதிர்ந்து போயிருந்த வேளையில், தற்போது ஸ்ரீரெட்டியின் முழு கவனமும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என, அவரது வரிசையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து தமிழ் பிரபலங்கள் பலரும் சிக்கி வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த ஒரு அதிர்ச்சியாக பிரபல இயக்குனர் சுந்தர்.சி மீதும் பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்து தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் அவர் மீது வழக்கு தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers