அரண்மனை படப்பிடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி செய்த செயல்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

அரண்மனை படப்பிடிப்பின் போது பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி தன்னை படுக்கைக்கு அழைத்தார் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலர் மீது பாலியல் ரீதியான புகார்களை தெரிவித்து வருகிறார்.

கடைசியாக ராகவா லாரன்ஸ் குறித்து பேசிய அவர் தற்போது தமிழ் திரைப்படமான அரண்மனை படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த விடயம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், அரண்மனை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது கணேஷ் என்பவர் என்னை படப்பிடிப்புக்கு அழைக்க நானும் அங்கு சென்றேன்.

அங்கு சுந்தர்.சியை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

பின் என் நண்பர் ஒளிப்பதிவாளரான செந்திலை சந்தித்தேன். 200 சதவீதம் அவரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பாய் என என்னிடம் கூறினார்.

அடுத்தநாள் சுந்தர்.சி மற்றும் செந்தில் அழைத்தார்கள், படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் கணேஷ் மற்றும் சுந்தர்.சியுடன் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என என்னிடம் கூறப்பட்டது.

அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும். கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...