பிக்பாஸில் பங்கேற்கவும் அதை செய்ய வேண்டுமா? நடிகையின் பேட்டியால் பரபரப்பு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தெலுங்கு நடிகை மாதவி லதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நடிகைகள் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பது போல் மறைமுக பேட்டி ஒன்றில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு நடிகையான மாதவி லதா அளித்துள்ள பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘பிக்பாஸ்-2 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகினார்கள். முதல் சீசனுக்கும் கூட என்னிடம் Interview செய்தார்கள்.

அப்போது மகிழ்ச்சியாக இருந்தது, இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுத்த Interview முழுக்க எனக்கு அசவுகரியமாக இருந்தது.

Interview-க்கு பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர் அசவுகரியம் என்று கூறியது படுக்கைக்கு அழைக்கப்பட்டதை தான் உணர்த்துகிறது என்ற வகையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...