ஐஸ்வர்யாவோடு நிஜமாகவே டேட்டிங் செய்ய விரும்பும் ஷாரிக் ஹாசன்

Report Print Trinity in பொழுதுபோக்கு

பிக் பாஸ் சீசன் இரண்டு இப்போதுதான் ஒரு வாரம் கழித்து லேசாக சூடு பிடித்துள்ளது. இருப்பினும் போட்டியாளர்களின் மிக கவனமான நடவடிக்கைகளால் அவர்களது நிஜ முகங்கள் இன்னும் வெளிப்பட ஆரம்பிக்கவில்லை.

இதில் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்வில் வெள்ளிக்கிழமையன்று நடந்தவை காட்டப்பட்டது. அதில் ஜனனியை அழ வைக்கிறார் ஐஸ்வர்யா. பின் அவரே சமாதானமும் செய்கிறார்.

ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை ஒரு வளர்ந்த குழந்தையாகவே காட்டுகிறது, அவரது மழலை தமிழ் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் தினமும் இந்த நிகழ்ச்சியினை பார்க்கிறது.

ஒரு குழந்தையின் குணத்தோடு ஒத்து போகும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார், ஆனால் சில நிமிடங்களில் அந்த கோபம் மாறிவிடுகிறது.

இப்படிப்பட்ட ஐஸ்வர்யாவை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாத நிலையில் முதல் நாளிலேயே முதல் டாஸ்க் ஆகா ஷாரிக் செய்த விடயம் " நீங்கள் யாருடன் டேட் போக விரும்புகிறீர்கள்" என்கிற பிக்பாஸின் கேள்விக்கு நேர்மையாக ஐஸ்வர்யா என்று கூறினார். கூடவே ஏன் அவரை பிடிக்கும் என்கிற சுவாரஸ்ய காரணத்தையும் கூறி இருந்தார்.

அத்தோடு முடிந்தது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் நேற்று திடீரென ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் யாருமற்ற தனிமையில் பேசி கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ப்ரொபோஸ் செய்வது போலத்தான் அவரது பேச்சு இருந்தது.

உன்னை எனக்கு பிடிக்கும் என்று ஷாரிக் ஆரம்பிக்கும்போதே ஐஸ்வர்யா ஜாக்கிரதையாக தனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும் தனது குடும்பம் தன்னை நம்பி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் ஷாரிக் ஒரு நல்ல நண்பன் இழக்க விரும்பாத நண்பன் என்றும் கூறுகிறார்.

இருப்பினும் மனம் தளராத ஷாரிக் மீண்டும் மீண்டும் ஐஸ்வர்யாவை தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். தான் எப்போது வேண்டுமானாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என்பதால் இப்போதே தனது விருப்பத்தை சொல்வதாகவும் இதுபற்றி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் எங்காவது அவுட்டிங் சென்று இது பற்றி பேசலாம் என்றும் கூறுகிறார்.

இதன் மூலம் ஐஸ்வர்யா மீதான ஷாரிக்கின் ஈர்ப்பும், அதனை அப்படியே விட்டு விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஷாருக் முயல்வதும் பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிகிறது.

இது எது வரை போகும் என்பது ஷாரிக்கிற்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் தெரியாது, போக போகத்தான் தெரியும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers