பிரபல திரைப்பட நடிகர் விஜய்வசந்தின் கால் முறிந்தது: ஷுட்டிங்கில் விபத்து

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வசந்தின் கால் பள்ளத்தில் சிக்கியதால், அவரின் கால் முறிந்துள்ளது.

விஜய் வசந்த், லீசா, மயில்சாமி, சாமிநாதன் உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் தான் மைடியர் லிசா, இப்படத்தை ரஞ்சன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாரதவிதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதன் பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், குறைந்தது மூன்று வாரங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...