தமிழ் பிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு சம்பளம் இவ்வளவு தானா? வெளியான ஆச்சரிய தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் திரைப்பிரபலங்கள் 100 நாட்கள் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி, சமீபத்தில் மீண்டும் நடத்தப்பட்டது.

கடந்த 17-ஆம் திகதி துவங்கிய இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்துவிட்டதால், தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதில் மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி, ரித்விகா, சென்ராயன் உள்ளிட்ட 16 பேர் பங்குபெற்றுள்ளனர்.

கடந்த நிகழ்ச்சியில் ஓவியா இதன் மூலம் தான் பிரபலமானதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகவே பல பிரலங்கள் இதில் கலந்து கொள்வதற்கு வெயிட்டிங்.

இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் பற்றி சம்பள விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது.

மும்தாஜ், பொன்னம்பலம், யாஷிகா, ஜனனி ஆகியோருக்கு ரூபாய் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும் தாடி பாலாஜி, டேனியல், மமதி சாரி, மஹத், ரித்விகா, சென்ராயன், அனந்த் வைத்தியநாதன் ஆகியோருக்கு ரூபாய் 2 லட்சம் சம்பளமாக கொடுப்பதாகவும், நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, என்.எஸ்.கே. ரம்யா, வைஷ்ணவி ஆகியோருக்கு தலா ரூபாய்1 லட்சம் சம்பளம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் தற்போது முக்கிய பிரபலமான யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் செம ஹிட்டாகியுள்ளது.

இந்த படத்திற்கு அவர் 20 முதல் 30 லட்சம் வாங்கியிருப்பதாகவும், அதே சமயம் ரித்விகா ஒரு படத்திற்கு குறைந்தது 10 லட்சமாவது சம்பளம் வாகுவார் எனவும் கூறப்படுவதால், இவ்வளவு குறைந்த சம்பளத்திற்கு இவர்கள் எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் இதில் விளம்பரக் கிடைத்தால் அவர்களின் மார்க்கெட் எங்கோ போய்விடும், உதாரணமாக முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவை கூறலாம்.மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...