நடிகை கவுதமிக்கு கமல்ஹாசன் சம்பளம் வழங்கவில்லையா?

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ஆடை வடிவமைப்பாளராக இருந்த நடிகை கவுதமிக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகை கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில், கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த நேரத்தில் அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன்.

கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது.

எனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமல்ஹாசனிடமும், அவரது நிறுவனத்திடமிருந்தும் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன்.

ஆனால் இன்னும் சம்பள பாக்கி வரவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல், கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டோம். சம்பளம் வழங்காததை தெரிவித்த கவுதமி, வழங்கியதை கூறவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers