பிக் பாஸ் 2: யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

நூறு நாட்கள் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிகர லாபம் இந்திய மதிப்பில் சுமார் 1,140 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஓவியா ஆர்மி, ஜூலியின் பொய் பித்தலாட்டம், ஆரவ்வின் காட்டப்படாத முத்தக்காட்சி என்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 2வது சீசனும் துவங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஓவியாவை களமிறங்கி அவரது ரசிகர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி அளித்தனர்.

இந்த நிலையில், பரபரப்பை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவு செலவுகள் என்று சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான செலவுகள்:

  • ஸ்டூடியோ செட்டிங் செலவு: ரூ.20 கோடி
  • நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்: ரூ.20 கோடி
  • போட்டியாளர்களுக்கு (16 பேருக்கு): ரூ.42 கோடி
  • 100 நாள் படப்பிடிப்புச் செலவு: ரூ.25 கோடி
  • முதல் மற்றும் கடைசி நாள் விழா செலவு: ரூ.3 கோடி
  • மொத்த செலவு: ரூ.110 கோடி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வருவாய்:

  • 30 வினாடிக்கான விளம்பரத்திற்கு: ரூ.25 லட்சம்
  • ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25: ரூ.12.5 கோடி
  • இதுவே 100 நாட்களுக்கு வரவு ரூ.1250 கோடி
  • மொத்த லாபம் ரூ.1140 கோடி

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்