முதல் நாள் அன்று பிக் பாஸில் மாட்டிக் கொண்ட ஓவியா

Report Print Trinity in பொழுதுபோக்கு
212Shares

பிக் பாஸ் சீசன் 2 நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய அறிமுக நாளிற்கு பிறகு இன்று முதல் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதில் சிறப்பு விருந்தினராக ஓவியா கலந்து கொண்டார். அவர் ஒரு நாள் மட்டுமே வீட்டில் இருக்க போகிறார். இருப்பினும் போட்டியாளர்களுக்கு அவர் 100 நாள் தங்குவது போல கூறி ஏமாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பினார் கமல்.

ஓவியா வந்த சிறிது நேரத்தில் அங்குள்ள போட்டியாளர் அனைவரும் ஓவியா ஏன் ஒரு பெட்டி மற்றும் கொண்டு வந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளால் ஓவியாவை அனைவரும் துளைக்க பொய் சொல்ல முடியாமல் ஓவியா இறுதியில் உண்மையை ஒப்பு கொண்டு அனைவரையும் புத்திசாலிகள் என்று பாராட்டினார்

ஆகவே விளையாட்டிற்கு கூட பொய் சொல்ல தெரியாதவர்தான் நம் ஓவியா என்பது தெள்ள தெளிவாகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்