கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
169Shares
169Shares
ibctamil.com

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவில் கடந்த ஆண்டு முக்கிய பிரபலங்களை வைத்து 100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

அதாவது 100 நாட்கள் ஒரே வீட்டில் அங்கிருக்கும் பிரபலங்களுடன் தங்க வேண்டும். அதன் பின் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்ய வேண்டும்.

அப்படி கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி ஆரம்பத்தின் போது எந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல இதுவே ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்டது.

இணையதளங்களில் ஓவியா ஆர்மி, பிந்து மாதவி ஆர்மி என சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 19 போட்டியாளர்கள் நிலைமை தற்போது என்ன தெரியுமா? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

ஓவியா

பிக் பாஸ் போட்டியின் மூலம் இவருக்கு ஆர்மி ஒன்று உருவானது. அதன் மூலம் ரசிகர்கள் எண்ணிக்கை கூடியது.

எங்கு சென்றாலும், இவருடன் செல்பி எடுக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்படி பிக்பாஸ் போட்டியின் மூலம் உச்சிக்கு சென்ற இவருக்கு தற்போது காஞ்சனா 3, 90 எம்.எல், களவாணி 2 , முனி 4 ஆகிய 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஜூலி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் என்றால் ஜுலி என்றே கூறலாம். அதன் பின் இவருக்கு பிக்பாஸ் மூலம் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘

ஆனால் அதில் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு பிடிக்காத காரணத்தினால் கெட்டப் பெயர் எடுத்து வெளியேறினார்.

இருப்பினும் அதை எல்லாம் தாண்டி தற்போது ஜுலி மிகவும் பிசியாக உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து உத்தமி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நமீதா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகம் படங்களில் நடிக்காத இவர் தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

ரைஸா

தமிழ் தெரியாத இவர் தற்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சுஜா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தில் நெகடீவ் ரோலில் நடித்தார். அதன் பின் வா டீல் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தவிர்த்து நீண்ட காலமாக தான் காதலித்து வந்த நடிகர் சிவக்குமாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

பிந்து மாதவி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இடையில் வந்த போட்டியாளரான இவருக்கும் பிந்துமாதவி என்ற ஆர்மி உருவாகியது.

தற்போது இவர் புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் பக்கா என்ற படம் வெளியானது

கணேஷ் வெங்கட் ராம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி படத்தில் நடித்தார்.

காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜுலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளர் என்றால் இவரைக் கூறலாம்.

சேரி பிகேவியர் என்ற வார்த்தையால் சர்ச்சைக்குள்ளான இவர் யாதுமாகி என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது வரை நெட்டிசன்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் நபராக உள்ளார்.

சினேகன்

ஓவியாவுடன் இவர் நடிப்பதாக இருந்த படம் இன்னும் தொடங்கவில்லை. கமலின் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான இவர், நடித்தே பட்டத்தை வென்றதாக பலரும் கூறி வருகின்றனர்.

இவர் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரணி

இவர் கடந்த வருடம் மட்டுமே நான்கு படங்களில் நடித்துள்ளார். சசிகுமாருடன் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் மக்களால விரும்ப்பப்பட்ட பிரபலங்களில் ஒருவர்.

சக்தி

நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெறிய மாற்றங்கள் எதுவும் நடடைபெறவில்லை. புதிய பட அறிவிப்புக்ளும் இன்னும் வெளியாகவில்லை.

வையாபுரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது தன்னுடைய குடும்பங்களை நினைத்தே கவலைப்பட்டு வந்த இவர் தற்போது கலகலப்பு 2, பக்கா ஆகிய இரு படங்களில் நடித்தார். மேலும் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

ஆர்த்தி

பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்தவுடன் அதிரடியாக பேசினார். மனதில் பட்டதை பேசினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வரும் இவர் கலக்கப்போவது யாரு, ஸ்டார் வார்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கஞ்சா கருப்பு

நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த நிமிர் படம் வெளியானது.

காஜல் பசுபதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதியில் வந்த பிரபலங்களில் இவரும் ஒருவர், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவரது நடிப்பில் கலகலப்பு 2 வெளியானது

ஹரிஷ் கல்யாண்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பெண்களை கவர்ந்திழுத்த இவர் தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அனுயா

2012- க்கு பிறகு இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரங்களும் கிடைக்கவில்லை.

ஸ்ரீ

ஆரம்பக்கட்டத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவருக்கு 2017-ம் ஆண்டு மாநகரம் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. புதிய பட அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்