நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

Report Print Kabilan in பொழுதுபோக்கு
31Shares
31Shares
ibctamil.com

நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திருநங்கைகளை அவமதித்தும் கருத்துக்களை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி, தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ_க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான தீர்ப்பு வெளியானது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்த நிலையில், இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, நடிகை கஸ்தூரி விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்ட செயலாளர் மணியழகன், நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திருநங்கைகளை அவமதித்தும் கருத்துக்களை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்