பிக் பாஸ் 2 வீட்டின் வெளிவராத ரகசியங்கள்: உங்கள் பார்வைக்கு!

Report Print Trinity in பொழுதுபோக்கு
203Shares
203Shares
ibctamil.com

பிக் பாஸ் 2 பற்றிய பல புதிய செய்திகள் உங்களுக்காக.

வரும் ஞாயிறு அன்று துவங்க இருக்கும் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போன முறை போல இல்லாமல் இந்த முறை வாஸ்து படி செட் போடப்பட்டுள்ளது என கூறுகின்றனர். மேலும் போன முறை இருந்த வீட்டை அப்படியே கலர்புல்லாக மாற்றியிருக்கின்றனர்.

போனமுறை ஸ்மோக்கிங்கிற்கு தனி ரூம் இருந்ததும் அந்த தனி அறையில் பல்வேறு விடயங்கள் கிசுகிசுக்கப்பட்டதும் யாராலும் மறந்திருக்க முடியாது. மேலும் உலக புகழ் பெற்ற மருத்துவ முத்தத்தை அரங்கேற்றியதும் அங்குதான்.

இந்த சீசனில் அந்த ஸ்மோக்கிங் அறை முற்றிலுமாக அகற்றப்பட்டு அது டாய்லெட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் குளம் அருகே சிறை போன்ற ஒரு இடத்தையும் செட் செய்திருக்கிறார்கள். இந்தி பிக் பாசில் இது இருந்தது. இப்போது தமிழுக்கும் வருகிறது. இதன் மூலம் தண்டனைகள் கடினமாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது.

போன சீசனில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 8 ஆண்கள் 8 பெண்கள் என கலந்து கொள்கிறார்களாம்.

போனமுறை போன்று இல்லாமல் இம்முறை 100 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சியை கொண்டு போக விஜய் டிவி முடிவு செய்திருக்கிறது. ஆகவே எதிர்மறை சக்திகள் பாதிக்காமல் இருக்க தகடுகள் போன்றவை பதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல புதிய மாற்றங்களுடன் இந்த பிக் பாஸ் சீசன் 2 கலர்புல்லாக களை கட்டுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்