டிரம்பையும் விட்டு வைக்காத பிரபல நடிகர் சிவாவின் தமிழ் படம் 2.0: வைரலாகும் புதிய புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
151Shares
151Shares
ibctamil.com

பிரபல திரைப்பட நடிகரான சிவா டிரம்ப்பைப் போன்று பேசிக் கொள்வது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரான சிவாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தமிழ் படம் 2.0. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

ஏனெனில் அப்படத்தில் தமிழ சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடித்திருந்த படத்தை சிவா கிண்டல் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.

அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில், புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் ஜனாதிபதிகள் நிற்பது போன்ற புகைப்படத்தை போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படமும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்