தனது மகளுக்கு ஸ்ரீதேவி கூறிய மிகப்பெரிய அறிவுரை என்ன தெரியுமா?

Report Print Kabilan in பொழுதுபோக்கு
187Shares
187Shares
ibctamil.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘தடக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், தனது தாய் கூறிய அறிவுரை என்ன என்பதை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘தடக்’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியது. இந்த டிரெய்லரை இதுவரை 18 மில்லியன் பேர் பார்த்துள்ளதால் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த டிரெய்லரில் ஜான்வி கபூர் தனது தாயை நினைவுபடுத்தும் வகையில் அசத்தலாக நடித்துள்ளார்.

முன்னதாக, ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனது தாயிடம் பகிர்ந்துகொண்ட விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் சாய்ராட் படத்தை எனது தாயுடன் பார்த்தேன். அப்போது நான் அவரிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இந்த படம் தான் எனது முதல் படமாக அமைய வேண்டும் மற்றும் நான் இதுபோல் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினேன்.

நானும், அம்மாவும் இந்த கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிப்பது என்பது குறித்த பெரிய கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அதன் பின்னர், கரண் ஜோகர் அழைத்தார். இது நடந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் கண்டிப்பாக அவரை இன்று miss செய்கிறேன். அவர் கொடுத்த பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள அறிவுரை என்னவென்றால் கடின உழைப்பு மற்றும் ஒவ்வொரு உணர்ச்சியையும் உணர வேண்டும் என்பது தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்