நடிகை கவுதமிக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
1017Shares
1017Shares
ibctamil.com

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த நடிகை கவுதமிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் - 1 மற்றும் விஸ்வரூபம் - 2 ஆகிய இரண்டுக்கும் சிறப்பாக ஆடை வடிவமைத்து கொடுத்த கவுதமிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் இதில் பணியாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகிய இருவரும் கடந்த 13 வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால் தனது மகளின் எதிர்காலம் கருதி கமலை விட்டு நிரந்தரமாக பிரிந்துசெல்வதாக கடந்த 2016 ஆண்டு கவுதமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்