பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த நடிகர் விஜய்: நெகிழ்ச்சி பின்னணி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
200Shares
200Shares
ibctamil.com

தூத்துக்குடியில் 13 பேர் பலியான நிலையில் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.

விஜய்யின் 44வது பிறந்தநாள் வரும் 22ம் திகதி வருகிறது. தற்போதே டுவிட்டரில் அவர் ரசிகர்கள் ஹேஷ்டேக் எல்லாம் உருவாக்கி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்ட மூடில் இருந்தாலும் விஜய் இல்லை.

ஆம், இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் விஜய்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

பலியானவர்களின் குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய்க்கு.

இதனால் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவர் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்