கொலை மிரட்டல் வருகிறது: உதவி இயக்குனரை அடித்த நடிகர் பப்லு

Report Print Santhan in பொழுதுபோக்கு
371Shares
371Shares
ibctamil.com

பிரபல சீரியல் நடிகரான வாணிராணி புகழ் பப்லு உதவி இயக்குனரை அடித்துவிட்டதால் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் உதவி இயக்குநர்கள் அவர் மீது பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்

இந்நிலையில் இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், நடிகரான பப்லு வாணி ராணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவுமே தமாதமாக வந்துள்ளார்.

இதனால் இது குறித்த பிரச்சனையை அப்போதைய சீனியர் உதவி இயக்குனர் அழகு, பப்லுவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்குமே வாக்குவாதம் முற்றியதால், உடனடியாக அழகு சீரியல் தயாரிக்கும் நிறுவனத்திடம் இது குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக தயாரிப்பு நிறுவனம் பப்லுவை அழைத்து பேசியதால், ஆத்திரமடைந்த பப்லு இதற்கு எல்லாம் காரணம் அழகு தான் என்று கூறி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஷுட்டிங் ஸ்பாட் என்று கூட பாராமல், பப்லு, அழகை அடித்துள்ளார். அதன் பின் இது பெரியவிடயமாக மாறியதால், பப்லு மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து பப்லு கூறுகையில், ஏதோ ஒரு சூழ்நிலையில் அடித்துவிட்டேன். அது பெரிய பிரச்சனையாக மாறி முடிந்துவிட்டது.

முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விடயத்தைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், நான் எத்தனையோ உதவி இயக்குநர்களுக்குப் பல உதவிகள் செயதிருக்கிறேன், ஆனால் அதைப் பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை.

வெளியில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அடித்துவிட்டேன் என்று மட்டும் சொல்கிறீர்கள், இது என்ன நியாயம்? அதுமட்டுமா இந்த பிரச்சனைக்கு பின் எனக்கு தினம் தினம் கொலை மிரட்டல் வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்