சவுதி அரேபியாவில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் ‘காலா’

Report Print Kabilan in பொழுதுபோக்கு
104Shares
104Shares
ibctamil.com

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உலக முழுவதும் வெளியாகியுள்ள காலா திரைப்படம், சவுதி அரேபியாவிலும் வெளியாகியுள்ளதால், அந்நாட்டில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 1980களில் மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக, திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, ரியாத்தில் திரையரங்கம் ஒன்று 35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் திறக்கப்பட்டது.

அதில், ஹாலிவுட் படமான ‘பிளாக் பாந்தர்’ திரையிடப்பட்டது. அதன் பின்னர், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படமும் அங்கு வெளியாகியுள்ளது.

இதன்மூலம், சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘காலா’ பெற்றுள்ளது. இந்த தகவலை காலா படத்தை தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்