விஷால் பதவி விலக வேண்டும்: தயாரிப்பாளர்கள் போர் கொடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
257Shares
257Shares
lankasrimarket.com

லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் விஷால் கூட்டு வைத்திருப்பதாக இயக்குனர் டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று சினிமா தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி. ராஜேந்தர், ஜே.கே ரித்தீஷ் உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்க பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்துக்கு பின்னர் பேசிய டி.ராஜேந்தர், நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி ரூ.7 கோடி எங்கே போனது என்பதை விஷால் சொல்ல முடியுமா? பொதுக் குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை.

லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை. தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது.

திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள், ஆனால் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறோம். முதலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என மாற்றம் வேண்டும் என்றார்.

ராதாரவி கூறுகையில், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக சொல்லும் விஷால் அவர்கள் யார் என சொல்லாதது ஏன்?

தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றால் பதவி விலகுவதாக கூறிய விஷால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்ராக்கர்ஸ் யார் என்ற உண்மையை கூற வேண்டும் எனவும் அவர்களுடன் விஷால் டீல் வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்