ஆதார் பற்றிய கருத்தால் சர்ச்சையை கிளப்பியுள்ள விஷால் படம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

விஷால், அர்ஜூன் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் குறித்து பேசப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தகவல் திருட்டு மூலம் நடைபெறும் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதைக்கரு ஆதார் அட்டை குறித்து உள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், வெறும் 500 ரூபாய்க்கே பல்லாயிரக்கணக்கான ஆதார் தகவல்கள் விற்கப்படும் நிலைமை உள்ளது என கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த ஆதார் விவரங்களையும் அர்ஜூன் பெறுவதாகவும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வகையான காட்சிகள், மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா மீதான நம்பிக்கையை இழக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers