பிரபல பாடகர் ஜேசுதாஸ் ஏன் செல்பி எடுத்தால் மிகவும் கோபப்படுகிறார்? வெளியான உருக்கமான பதில்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாடகர் டெல்லியில் நடந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியில் வந்தார்.

அப்போது பலர் அங்கிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் அவரிடம் செல்பி எடுத்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இந்த இளைஞனின் செல்போனை வாங்கி உள்ளே இருந்த புகைப்படத்தை நீக்கிய பின்பே செல் போனை கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், செல்பி எடுத்த இளைஞரிடம் இவ்வளவு கடுமை காட்ட அவசியமில்லை ஒரு செல்பி எடுத்தால் என்ன ஆகி விடப்போகிறது, தலைக்கனம் பிடித்தவர் என ஜேசுதாஸ் மீது கடுஞ்சொற்கள் பாய்ந்தன.

இந்நிலையில் ஜேசுதாஸின் தீவிர ரசிகரும் அவரை பற்றி தெரிந்தவருமான அனுப் என்பவர் சமூகவலைத்தில் அதற்கான பதிலளித்துள்ளார். அதில், மனிதர்கள் எப்போதும் இன்னொருவரின் உதவியின்றி வாழ நினைக்க கூடாது.

மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழக் கூடியவை. மனித வாழ்க்கைக்கு இன்னொருவரின் துணையும் ஒத்துழைப்பும் தேவை.

ஒருவரைச் சார்ந்து மற்றொருவர் வாழ்வதுதான் உலக நியதி. ஆனால், தற்போதைய இளைய தலைமுறை உறவுகளை வளர்க்க முயலவில்லை.

மாறாக தனித் தனி தீவுகளாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள இன்னொருவர் உதவி தேவைப்பட்டது.

செல்பி வந்த பிறகு புகைப்படம் எடுக்கக் கூட இன்னொருவர் உதவி தேவையில்லை என்றாகி விட்டது. இதன் காரணமாகத் தான் ஜேசுதாஸ் செல்பி எடுக்க அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நான் துபாய் விமானநிலையத்தில் அவரிடம் புகைப்படம் எடுக்கப்பட்ட போது, செல்பியை வெறுப்பதற்கான காரணத்தை அவர் கூறியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் இன்னொரு நபர் உதவியுடன் புகைப்படம் எடுக்கும்போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புன்னகையுடன் போஸ் கொடுக்க ஜேசுதாஸ் தயங்குவதே இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers