ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் விசேஷம்! நடனமாடி அசத்திய மகள்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தம்பி மகளின் திருமண நிகழ்ச்சியில், ஜான்வி மற்றும் குஷி கபூர் நடனமாடி அசத்தினர்.

ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர் அனில்கபூர். இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி ஆவார். இவரது, மகள் சோனம் கபூரும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஸ்ரீதேவியின் இறப்பினால் எளிய முறையில் நடத்த கபூர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மும்பையில் நாளை இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அஹுஜா டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், திருமண வரவேற்பு நிகழ்வு டெல்லியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மும்பையில் மணப்பெண் சோனம் கபூருக்கு மெகந்தி விழா நடந்தது. இவ்விழாவில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் ஆகியோர் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.

சோனம் கபூருடன் அவரின் தங்கைகள் அன்ஷுலா, ஜான்வி, குஷி மற்றும் ஷனாயா ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மணமகன் ஆனந்த் அஹுஜா, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அஹுஜாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers