பிரபல நடிகரின் படப்பிடிப்பில் புகுந்த பாம்புகள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் படப்பிடிப்பில் இரண்டு பாம்புகள் புகுந்ததால், சுமார் ஒரு மணிநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கரண் ஜோகர் தயாரிப்பில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித், வருண் தவான், அலியா பட், சோனாக்‌ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் ‘கலன்க்’.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் வருண் தவான், அலியா பட், மாதுரி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருண் தவான் மற்றும் அலியா பட் நடித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு பெரிய பாம்புகள் அங்கு வந்துள்ளன. அந்த பாம்புகள் இரண்டும் சுமார் ஒரு மணிநேரம் புணர்வில் ஈடுபட்டன.

இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த இரண்டு பாம்புகளும் பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டன. இதற்கு முன்பும், கரண் ஜோகர் இயக்கிய ‘மை நேம் இஸ் கான்’ படப்பிடிப்பும் பாம்புகளால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...