எனக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தார்: பாலியல் கொடுமை குறித்து குமுறிய பிரபல நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

திரையுலகில் வாய்ப்புக்காக தான் அனுபவித்த பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை உஷா ஜாதவ் கூறியுள்ளார்.

திரையுலகில் பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளதாக பிரபல நடிகைகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் கூட கபாலி திரைப்படத்தின் நாயகி ராதிகா ஆப்தே, திரையுலகில் சிலர் தங்களை கடவுள் போல் நினைத்துக்கொள்கின்றனர்.

அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் நான் கூறும் விவகாரம் எடுப்படாமல் போய்விடுகிறது. பாலியல் தொல்லை குறித்து பேசினால் எனது திரையுலக வாழ்க்கையே முடக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில் இன்னொரு பிரபல நடிகை உஷா ஜாதவ் தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு பதிலுக்கு என்ன தருவாய் என்று ஒருவர் கேட்டார்.

உடனே நான், என்னிடம் பணம் எதுவும் கிடையாது என்றேன். உடனே அவர், இல்லை இல்லை நான் பணத்தை பற்றி பேசவில்லை, என்னுடன் இரவு தங்க வேண்டும் என்றார்.

அதே போல இன்னொரு தயாரிப்பாளர் நடிகையாக வேண்டுமென்றால் பாலியல் உறவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றவர் எனக்கு அடிக்கடி முத்தம் கொடுத்ததோடு சில சமயம் அத்துமீறினார்.

அதிர்ச்சியடைந்த நான் அவரை தடுத்து நிறுத்தினேன், அதற்கு அவர் நடிகையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான செயல்பாடு உனக்கு தெரியவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers