நாசாவின் உதவியுடன் நிஜமாகவே விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் டிவி சீரியல்

Report Print Trinity in பொழுதுபோக்கு

இயக்குநர் டாரென் அர்ணாப்ஸ்கி யை உலகில் இருக்கும் அனைத்து திரை ரசிகர்களுக்கும் தெரியும். மிக சிறிய பட்ஜெட்டில் மிகப் பெரிய அர்த்தம் பொதிந்த மனிதவியலுக்கு தேவையான விஷயங்களை தனது திரைப்படம் மூலம் மக்களுக்கு கடத்தியதில் முக்கியமானவர்.

இவரது படங்களில் செயற்கையான fiction முறைகளை விட நிஜத்திற்கு நெருக்கமான உண்மைகளை மட்டுமே காட்டுவது வழக்கம். மேலும் இவரது கதையம்சம் எப்போதும் பிரபஞ்சம் சார்ந்த உண்மைகளை சற்று தொட்டு கொண்டுதான் போகும். இவரது முதல் படம் "பை" (pi) அதிலிருந்தே விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் இடையேயான மெல்லிய கோடுகளை நமக்கு அடையாளம் காட்டியிருப்பார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒன் ஸ்ட்ரேஞ் ராக் எனும் இவரின் சீரியலுக்காக நிஜமாகவே தற்சமயம் விண்வெளியில் உள்ள விஞ்ஞானிகள் அங்கிருந்தபடியே நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

பூமியில் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதைக் காட்டும் வகையில் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெறும் அரை மணி நேரம் மட்டுமே வரும் இக்காட்சிகளுக்காக விண்வெளியில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கின்றனர்.

இதற்காக முதலில் இயக்குனர் அர்ணாப்ஸ்கியே விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்வதாக இருந்தது. பின் நாசா அதற்கு அனுமதி வழங்காததால் நாசா விஞ்ஞானிகள் இருவர் இதற்கு உதவி செய்திருக்கின்றனர். பாவ்லோ நெஸ்போலி மற்றும் பேகி விட்சன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கும் இதற்கென சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டன.

வீடியோ கான்பரன்சிங் மூலமே இந்தக் காட்சிகளை இயக்கியுள்ளார் அர்னாப்ஸ்கி. எப்படி காமெராவை ஆபரேட் செய்வது எனத் தொடங்கி லைட்டிங் எங்கு வைக்கலாம் எந்தக் கோணத்தில் வைத்தால் சரியாக இருக்கும் எப்படி வசனம் பேசுவது போன்ற சகல விஷயங்களையும் வீடியோ கால் மூலமாகவே சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அர்ணாப்ஸ்கியின் முந்தைய படமான fountain இல் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் மூன்றையும் கையாளும்போதும் இதற்கென பிரபஞ்சம் பற்றிய சில உண்மைகள் மற்றும் சில பழமை நம்பிக்கைகள் இரண்டையும் இணைத்து நம்மையும் கதையோடு இயைந்து போக செய்திருப்பார்.

இந்த நிலையில் இவரது நிஜ விண்வெளி சீரியல் நிச்சயம் பெரும்புகழ் பெரும் என்பதில் சந்தேகமில்லை

நேஷனல் ஜியோகிராபி சேனலில் வெளிவரும் இந்த சீரியலை தொகுத்து வழங்குபவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers