புகழ்பெற்ற ஹாரி பாட்டர் திரைப்பட நடிகர் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

உலகளவில் புகழ்பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த குள்ளநடிகர் வெர்னி ட்ரோயர் தனது 49-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பல பாகங்களை கொண்டு வெளியான ஹாரிபாட்டர் திரைப்படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டாலும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது.

இத்திரைப்படத்தில் வரும் கோப்லின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வெர்னி ட்ரோயர் என்ற வெறும் 2 அடி 8 அங்குலம் கொண்ட குள்ள நடிகர் நடித்திருந்தார்.

கோப்லின் கதாபாத்திரம் வெர்னிக்கு பெரும் புகழை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் வெர்னி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவர் இறப்புக்கான காரணம் வெளிவராத நிலையில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை ஆகிய இரண்டும் மிகவும் கடுமையான பிரச்சினைகள் என அவர் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதனால் வெர்னி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers