விவசாயிகளுக்காக குளம் தோண்டிய நடிகர் அக்‌ஷய்குமார்: நெகிழ்ச்சியடைந்த மக்கள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார், விவசாயிகளின் நலன் கருதி குளம் வெட்ட ரூ.25 லட்சம் கொடுத்துள்ளதுடன், குளம் தோண்டும் பணியிலும் ஈடுபட்டார்.

நடிகர் அக்‌ஷய்குமார் சினிமா மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு ஒன்றிற்காக மராட்டிய மாநிலம் சடாரா பகுதிக்கு சென்றுள்ளார்.

அக்கிராமத்தில் மழை நீரை சேமிப்பதற்காக குளம் தோண்டும் பணி நடந்து வந்தது. இதனை கேள்விப்பட்ட அக்‌ஷய்குமார், குளம் வெட்டும் பணிக்காக கிராம மக்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார்.

மேலும், படப்பிடிப்புக்கு இடைவெளி விட்ட அவர், கிராம மக்களுடன் சேர்ந்து குளம் தோண்டும் பணியிலும் ஈடுபட்டார். இதனால் கிராம மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக அக்‌ஷய்குமார் மக்களிடம் கூறுகையில், ‘உங்கள் கண்களில் நீர் வருவதை பார்க்க விரும்பவில்லை. குழாய்களில் தண்ணீர் வருவதை பார்க்க விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers