20 வயது காதலியை திருமணம் செய்ய போகும் 52 வயது நடிகர்

Report Print Athavan in பொழுதுபோக்கு

52 வயதான நடிகர் மிலின்ட் சேமான், 20 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

பாலிவுட் நடிகர் மிலின்ட் சோமன் 90களில் பிரபல மொடலாக திகழ்ந்தவர், இவர் தன்னுடைய 52 வயதில் 20 வயது பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

மிலின்ட் சோமன் மற்றும் அங்கிதா ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெற வேண்டும் என விரும்புவதால் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

பிரஞ்ச் நடிகை மைலின் ஜம்பானலை மிலின்ட் சோமன் 2006ம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2009ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்