உருக்கமாக நன்றி தெரிவித்த நடிகை ஸ்ரீதேவி குடும்பம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரீதேவி மாம் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அவரது முதல் தேசிய விருது ஆகும், ஸ்ரீதேவிக்கு கிடைத்துள்ள இந்த விருதுக்கு அவரது குடும்பத்தினர் உருக்கமாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது எங்கள் எல்லோருக்கும் சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த மனைவி மற்றும் சிறந்த தாய் ஆவார்.

அவரது சாதனைகளை கொண்டாட வேண்டிய தருணம் இது. அவர் இப்போது எங்களோடு இல்லை என்றாலும் அவரது சாதனைகள் எப்போது எங்களோடு இருக்கும்.

இந்தி விருதினை ஸ்ரீதேவிக்கு அறிவித்த இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்