ஸ்ரீதேவி மகளின் தவறான புகைப்படம்: அசிங்கமாக திட்டிய அண்ணன்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் தவறான புகைப்படங்களை வெளியிட்ட இணையதளங்களை அவரது சகோதரர் அர்ஜூன் கபூர் மோசமாக விமர்சித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது சாய்ராட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இவரது புகைப்படங்களை சில இணையதளங்கள் தவறாக வெளியிட்டுள்ளன,

ஜான்வி கபூர் எவ்வாறு கவர்ச்சியாக ஆடை அணிந்துள்ளார், அவருக்கு அந்த ஆடை எப்படி இருக்கிறது என மோசமான கருத்துக்களுடன், அவரது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில், ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அர்ஜூன் வீட்டிற்கு சென்றபோது கூட, அவர் எந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கிறார் என்பதனை புகைப்படம் எடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து அர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படி தவறான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் திசை திருப்ப முயற்சிக்கும் உங்களை பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.

உங்களது கண்கள் எப்போது தவறானவற்றை தேடுகிறது, நாம் நாட்டில் இளம்பெண்களை இப்படி பார்ப்பது வெட்கப்படவைக்கிறது என டுவிட் செய்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers